புதுக்கோட்டை மாவட்டம், பனையவயல் கிராமத்தில் சாலையோரம் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் நடுப்பகுதியில் சிதிலமடைந்து மின் கம்பம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதையடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் இந்த மின்கம்பம் கீழே விழாதவாறு அவற்றின் மீது கயிறு கட்டி அருகில் உள்ள மின்கம்பத்தில் தாங்கி நிற்குமாறு கட்டியுள்ளனர். எனவே பலத்த காற்று வீசும்போது இந்த மின் கம்பம் சாலையில் முடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.