புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டண வசூல் மையம் உள்ளது. இந்த மையத்தில் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதமாக இந்த மின்கட்டண வசூல் மையம் செயல்படவில்லை. இதனால் தனியார் இ-சேவை மையங்களில் பொதுமக்கள் கூடுதல் தொகையுடன் மின்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே இந்த மின்கட்டண வசூல் மையம் தடையின்றி செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.