பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே பதினெட்டுகுன்னு கிராமத்தில் மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் அந்த தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கிறது. இதனால் அந்த கிராமப்பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு புதிதாக தெருவிளக்குகள் பொருத்த வேண்டும்.