பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் பொதுமக்களின் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் விளக்கு எரியாததால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளதால் பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.