நாகர்கோவில் பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளில் முக்கிய இடமாக சொத்தவிளை கடற்கரை உள்ளது. இங்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். ஆனால் இந்த கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், கடற்கரைக்கு வரும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அச்சம் காரணமாக மக்கள் சிறிது நேரத்திலேயே அங்கி செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்கை மாற்றி புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.