ஆண்டகலூர் கேட்டிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தோனமேடு, பாலப்பாளையம், குருக்கபுரம், வண்டிப்பேட்டை, குருசாமிபாளையம் என அடுத்தடுத்து பல ஊர்கள் உள்ளன. இவ்வழியில் சாலையின் இருபுறமும் வரிசையாக புளிய மரங்கள் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையில் இரு புறங்களில் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செந்தில்ராஜா, ராசிபுரம்.