கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஒன்றியம் 70 கீரனூர் கிராமத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் சரிவர ஒளிர்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 70 கீரனூர் கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.