தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2025-04-13 14:45 GMT

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கீழவீதியில் மகாலிங்கநகர் உள்ளது. இந்த பகுதியில் மிகவும் தாழ்வான நிலையில் மின்கம்பிகள் செல்கிறது. மரக்கிளைகளுக்கு நடுவே மின்கம்பிகள் செல்வதால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பிகளில் மரக்கிளைகள் உரசி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மரக்கிளைகள் உரசுவதால் மின்கம்பிகளில் இருந்து தீப்பொறி வெளியாகிறது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பிகளை சரிசெய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்