ஆத்தங்கரை பள்ளிவாசல்- ராமன்குடி சாலையில் உள்ள மின்கம்பம் பாதியில் உடைந்து வளைந்து நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.