பெரம்பலூர் மாவட்டம், வரகுபாடி கிராமத்தில் தெருவில் ஏராளமான மின்விளக்குகள் உள்ளது. இந்த மின்விளக்குகளில் பெரும்பாலானவை போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தெருவில் நடமாடவே முடியவில்லை. இதனால் சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.