வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் ஒரு சில பகுதிகளில் மின் கம்பங்களில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளது. தற்போது அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பிகளில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.