கருங்கல் வினியோக பிரிவுக்கு உட்பட்ட பொட்டக்குழி பகுதியில் சாலையின் மிக அருகில் ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினமும் பள்ளி குழந்தைகளின் வாகனங்கள் சென்று வருகின்றன. டிரான்ஸ்பார்மர் சாலையின் அருகில் உள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் நலன்கருதி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.