சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா பொன்நகர் அழகப்பர் சாலை பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுவதுடன், மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்விபத்துகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே மின்கம்பத்தை சீரமைக்கவும், மின்ஒயர்களை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.