திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டியிலிருந்து சிறுநாவலூர் செல்லும் சாலையில் மின்சார அலுவலகம் அருகே மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இப்பகுதியில் சமீபத்தில் மின்கம்பிகள் உரசியதில் 2 வாகனங்கள் தீக்கிரையான நிலையில், பஸ்கள், கனரக வாகனங்கள் அதிகம் கடக்கும் சாலையில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.