வேப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து உள்ளது. அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இரவு நேரத்தில் மருத்துவமனை இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொது மக்கள், நோயாளிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அங்கு அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்லவே அச்சமடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.