மதுரை பொன்மேனி மாடக்குளம் மெயின் ரோட்டில் உள்ள மயானம் மற்றும் அப்பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அப்பகுதியில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்குகளை மாற்றியமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.