சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-03-30 10:34 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுனில் கொண்டப்பநாயக்கன் பாளையம் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சாலையில் மின் கம்பம் ஒன்று சேதமடைந்து இருக்கிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் நிலையில் இருக்கிறது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்