திட்டக்குடி அருகே வைத்தியநாதபுரத்தில் அமைக்கப்பட்ட தெரு மின் விளக்குகளில் பெரும்பாலான மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.