புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை புதிய பஸ்நிலையம் அருகே காமராஜர் நகர் பகுதி உள்ளது. இங்கிருந்து மணமேட்டுப்பட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்றில் கொடிகள் முளைத்து மின்கம்பத்தை சூழ்ந்துள்ளது. நீண்ட நாட்களாக அதனை அகற்றாத்தால் மின்கம்பத்தில் பாதி அளவிற்கு கொடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்கம்பம் உள்ள சாலையின் வழியாக பெரியார் நகர், மணமேட்டுப்பட்டி, , ரத்னா கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்சென்று வருகின்றனர். மேலும் இந்த செடியை பொதுமக்கள் யாராவது பிடித்தாலோ அல்லது கால்நடைகள் மேய்ந்தாலோ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆபத்தான நிலையில் மின்கம்பத்தை சுற்றி இருக்கும் செடி-கொடிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு ெகாள்கிறோம்.
,
,