பண்ருட்டி 10-வது வார்டு பக்கிரிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கம்பம் உடைந்து விழுந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.