சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் இருந்து குஞ்சாண்டியூர் செல்லும் வழியில் வீரக்கல் புதூர் பஸ் நிறுத்தம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த இடத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருப்பதால், வாகனங்களில் சென்று வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ரெயில்வே கேட் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?