பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வயலூர் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதி வழியாக மின் கம்பிகள் செல்கின்றன. இந்த மின் கம்பிகளை தாங்கி நிற்கும் ஒரு சில மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வயல்வெளியில் கூலி தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, இந்த மின் கம்பங்கள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.