திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு முருகானந்தபுரம் 2-வது வீதியில் உள்ள ஒரு மின் கம்பத்தின் தரைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தாங்கு காங்கிரீட் தளம் உடைந்து விட்டது. இதனால் மின்கம்பம் முறிந்து விழலாம். அதற்கு முன் அந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.