புதுச்சேரி 100 அடி சாலை மேம்பாலத்தில் இருந்து அரும்பார்த்தபுரம் செல்லும் சாலையில் புதிதாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் மின் இணைப்பு வழங்கப்படாததால் இரவு நேரங்களில் சாலை இருள்சூழ்ந்து கிடக்கிறது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை ஒளிரச்செய்ய வேண்டும்.