குமாரபாளையம் பஸ் நிலையம் அடுத்த வேதாந்தபுரம் பகுதியில் பொது மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் வழியில் மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கிறது. இதனால் இவ்வழியே கனரக வாகனங்கள் சென்றால் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும் சொர்க்க ரதத்திற்கு மேலே மின் கம்பிகள் உரசி விடும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, குமாரபாளையம்.