எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2025-02-23 13:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சீனி கடை முக்கம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஆகும். இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. கறம்பக்குடியிலிருந்து இயக்கப்படும் அனைத்து பஸ்களும், கனரக வாகனங்களும் இந்த வழியாக தான் செல்ல வேண்டும். இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்த 3 மாதமாக எரியவில்லை. இதனால் சீனி கடை முக்கம் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள், பஸ் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே கறம்பக்குடி சீனி கடை முக்கம் பகுதியிலுள்ள உயர் கோபுர மின் விளக்கை ஒளிரச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்