தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2025-02-23 11:42 GMT

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா காணியாளம்பட்டி நன்னிபாறை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஓட்டல்கள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. இங்குள்ள பஸ் நிறுத்த பகுதியில் அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 12 மணி வரை பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன. இந்த நிலையில் பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது அங்கு பஸ் ஏற காத்திருப்போருக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்