திருப்பூர் பி.என். ரோடு புதிய பஸ் நிலையம் தொடங்கி பிச்சம் பாளையம் பஸ் நிறுத்தம் வரையில் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான மின் விளக்குகள் தொடர்ந்து பல நாட்களாக எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.