மின் விளக்குகள் வேண்டும்

Update: 2025-02-16 16:57 GMT

தொளசம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் அம்பேத்கர் நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையை தாண்டி நாகாத்தம்மன் கோவில் செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் குடியிருப்பு பகுதிக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் அமைக்கப்பட்ட ஒரு சில மின் விளக்குகளும் சரி வர எரிவதில்லை. எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தரவும், எரியாத விளக்குகளை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்