பர்கூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை மைதானத்தில் நடைபெறும். இந்த மைதானத்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எரிவதில்லை. இதனால் இப்பகுதி வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் சிலர் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி, உடைத்து விட்டு செல்கின்றனர். எனவே தாமதமின்றி சந்தை மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
-சுந்தரம், பர்கூர்.