சாலையின் இருபக்கமும் மின்விளக்கு வசதி

Update: 2025-12-28 18:49 GMT

மேல்மொணவூர் முதல் மோட்டூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் இருபக்கமும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். அந்த வழியில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு தொழிற்பயிற்ச்சி கூடம், அரசு பள்ளிக்கூடம், அரசு கோ ஆப்டெக்ஸ், தமிழ்நாடு ஐ.டி. நிறுவனம், கோவில், தெள்ளுர் இணைப்பு சாலை, கல்லூரி ஆகியவை உள்ளன. அங்கு மின் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேசிய நெடுஞ்சாலையின் இருபக்கமும் மின் விளக்குகளை பொருத்த வேண்டும்.

-ராஜா, மேல்மொணவூர். 

மேலும் செய்திகள்