பச்சையாங்குப்பத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளது. இரவு வேளைகளில் அப்பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காட்சிப்பொருளாக உள்ள மின்விளக்குகளை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.