மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2025-02-16 12:23 GMT
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி மெயின் சாலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆபத்து ஏற்படும் முன்பு மின்கம்பம் மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்