தாழ்வாக செல்லும் மின்ஒயர்

Update: 2025-02-09 15:59 GMT

மதுரை நகர் குலமங்கலம் சாலை பூ.லட்சுமிபுரம் நடுத்தெருவில் மின் ஒயர் தாழ்வாக செல்கிறது. வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில் மின்ஒயரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்