அவினாசி போலீஸ் நிலையம் முன்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் ஆபத்தான நிலையில் சாய்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழ வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே ஆபத்தாக காணப்படும் மின்கம்பத்தை மாற்றி அமைத்து புதிதாக மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, அவினாசி.