நட்டாலம் அடுத்த இடவிளாகம் திட்டை பகுதியில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் ஒருபுறம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாலையில் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.