பென்னாகரம் பஸ் நிலைய பகுதியில் அங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும், கடைகள், வீடுகள் உள்ளிட்டவைகளுக்கும் குறிப்பிட்ட ஒரு மின்கம்பத்தில் இருந்து மின் இணைப்புகள் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மின் கம்பத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மின் இணைப்புகளும் மிகவும் தாழ்வான நிலையில் செல்கிறது. மேலும் மின்கம்பமும் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மின்கம்பிகளில் உரசியபடி அபாய நிலையில் செல்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின் இணைப்புகளை சரி செய்ய வேண்டும்.
-சேட்டு, பள்ளத்தூர்.