கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியில் தனியார் பேக்கரி முன்பு சாலையின் நடுவே மின்கம்பம் வைத்து தெருவிளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் கேபிள்கள் துண்டித்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மின் கசிவு ஏற்படுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக சாலையை கடக்கும்போது, அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும்.