புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டியில் ரெயில்வே கேட் பகுதியில் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு பழுதடைந்து பல மாதங்கள் ஆகிறது. தெருவிளக்கு எரியாததால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்கை விரைந்து சீரமைக்க வேண்டும்.