கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்-நொய்யல் செல்லும் சாலையில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் தார் சாலை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நெடுகிலும் மின்கம்பம் நடப்பட்டது. இந்த மின்கம்பத்தின் வழியாக மின்கம்பி பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பி வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்த நிலையில் இந்த மின் கம்பத்தில் பொறுத்தப்பட்டுள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்வதினால் இந்த வழியாக கனர வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.