புதுக்கோட்டை மாவட்டம் வளவம்பட்டியிலிருந்து சோத்துப்பாளை செல்லும் சாலையில் அம்மையன்தெரு சந்திப்பில் குடியிருப்பு பகுதியில் ஒரு மின் கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதையடுத்து சம்பந்தப்பட்ட மின்சார வாரிய துறை அதிகாரிகள் அதன் அருகில் புதிய மின் கம்பத்தை நட்டு உள்ளனர். ஆனால் மின் இணைப்புகள் புதிய மின் கம்பத்திற்கு மாற்றப்படாமல் பழைய மின்கம்பத்திலேயே இணைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய மின்கம்பம் அமைக்கப்படும் பலனின்றி உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.