சிக்கல் ஊராட்சி மெயின்ரோடு மதார்ஷாமரைக்காயர் தெருவில் சாலையோரத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்விளக்குகள் கடந்த சில வாரங்களாக சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக தெரு முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட தெருவில் ஆய்வு செய்து மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.