ஒட்டன்சத்திரம் தாலுகா அரசபிள்ளைபட்டி பைபாஸ் சாலையில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்கை விரைந்து சரிசெய்ய வேண்டும்.