எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2025-01-05 13:20 GMT

பென்னாகரம் 4 ரோடு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்கோபுர மின்விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. தர்மபுரி-ஒகேனக்கல் பிரதான சாலையில் மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே எரியாத உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக சரிசெய்து எரிய செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வகுமார், முதுகம்பட்டி.

மேலும் செய்திகள்