புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த மூக்கம்பட்டி கிராமம் அருகே உள்ள மின்மாற்றில் இருந்து செல்லும் மின்கம்பிகளை தாங்கி நிற்கும், ஒரு மின் கம்பத்தில் செடி-கொடிகள் படர்ந்து மின்கம்பம் தெரியாத அளவிற்கு வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது, இந்த மின் கம்பம் அருகே செல்லும் கால்நடைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.