கரூரிலிருந்து வெள்ளியணை பாளையம் வழியாக திண்டுக்கல்லுக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த மாநில நெடுஞ்சாலையில் வெள்ளியணை அருகே செல்லாண்டிப்பட்டி பகுதியில் கரூர், திண்டுக்கல் அகல ரெயில் பாதை குறுக்கிடுகிறது. அந்தப் பகுதியில் ரெயில் மேலே செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மேம்பாலத்துக்கு அடியில் மாநில நெடுஞ்சாலையில் பிற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலத்துக்காக அமைக்கப்பட்ட தூண்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மோதி அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதற்கு காரணம் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதே ஆகும். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த மேம்பாலப் பகுதியில் அடியில் இருபுறமும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.