அபாயகரமான மின்கம்பம்

Update: 2025-01-05 11:04 GMT

பந்தலூரில் உள்ள 10-ம் நெம்பர் ஆதிவாசி காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பை ஒட்டி அபாயகரமான மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயத்தில் காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஆதிவாசி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க முன்கூட்டியே அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்