உயர் மின்கோபுர விளக்கு எரியவில்லை

Update: 2024-12-29 12:47 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி, கோட்டகரை பஸ் நிறுத்ததிற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிறுத்ததிற்கு இரவு நேரம் வரும் பயணிகளின் வசதிக்காக அதன் அருகில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்கு கடந்த ஒரு ஆண்டுகளாக எரியவில்லை. இதனால் இரவு நேரம் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகளின் பாதுகாப்பு கருதி உயர் மின்கோபுர விளக்குகளை உடனே சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்