கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, நன்செய் புகழூர் ஊராட்சிக்குட்பட்ட தவுட்டுப்பாளையம் - கட்டிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பி வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. தற்போது இந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தாக உள்ளது. அதிக அளவு காற்று அடித்தால் மின்கம்பம் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.