குடிநீர் கிடைக்காமல் அவதி

Update: 2024-12-29 11:17 GMT
வேட்டமங்கலம் ஊராட்சி, முத்தனூர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு வீடுகளை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு தேவையான குடிநீரை குடிநீர் குழாய் மூலம் பிடித்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முத்தனூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வராதால் பொதுமக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கோம்பு பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் பொதுமக்கள் தண்ணீரை பிடித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்